2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

புலமைப் பரிசில்கள் வழங்கி வைப்பு

Sudharshini   / 2015 ஜனவரி 26 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்


கிழக்கு பல்கலைகழகத்தின்  மருத்துவ பீடம், விவசாய பீடம், கலை கலாசார பீடம் மற்றும் வர்த்தக முகாமைத்துவ பீடங்களில் கற்கைகளைத் தொடரவுள்ள மாணவர்களுக்கு புலமைப் பரிசில்கள் வழங்கும் நிகழ்வு, மட்டக்களப்பு ரோட்டறிக் கழக மண்டபத்தில் நடைபெற்றது.


இதன்போது, மாவட்டத்தின் பல பாகங்களிலிருந்தும் தெரிவான மாணவர்கள் இப்புலமைப்பரிசிலைப் பெற்றுக்கொண்டதுடன் இரு பார்வையற்ற பட்டதாரி மாணவர்களுக்கும் புலமை பரிசில் வழங்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.


பெற்றி யுனி பண்ட் நிறுவன தலைவர் வைத்திய நிபுணர் கே.சுந்தரேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு இராமகிருஸ்ணமிஷன் தலைவர் சுவாமி சதுர்புஜானந்தாஜீ மகராஜ் மற்றும் உளவள நிபுணர் அருட்தந்தை போல் சற்குணநாயகம் அடிகளார் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர்.


அவுஸ்திரேலிய பட்டதாரிகள் தமிழ் சங்கத்தின் அனுசரணையுடன் பெற்றி யுனி பண்ட் நிறுவனத்தினூடாக இப்புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளன.


மேலும் இம்மாணவர்களின் கற்கைநெறிகள்  நிறைவுபெறும் காலம் வiர் புலமைப்பரிசிலானது வழங்கப்படவுள்ளது. அத்துடன், குறித்த மாணவர்களுக்கு மாத்திரமல்ல, கற்பதற்கான வசதிக்குறைவுடன் இருக்கும் பலருக்கு உதவ வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X