Suganthini Ratnam / 2015 ஜனவரி 27 , மு.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,ஆர்.ஜெயஸ்ரீராம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சந்தனமடு ஆற்றுப்படுக்கையில் சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வை தடுக்குமாறு கோரி, சித்தாண்டி முருகன் கோவில் முன்பாக அப்பகுதி பொதுமக்கள் திங்கட்கிழமை (26) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 5 வருடங்களாக ஒரு சில அரசியல்வாதிகளின் தயவுடன் சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மாறாக, பெரிய கனரக வாகனங்கள் மற்றும் அகழ்வு இயந்திரங்களை பயன்படுத்தி மேற்படி சந்தனமடு ஆற்றுப்படுகையில் மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு, இதன் மூலம் அதிக இலாபமும் ஈட்டப்படுகின்றன. இதனால், அப்பகுதியில் வருடா வருடம் வெள்ள அபாயத்தை எதிர்நோக்குவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
கடந்தகால ஆட்சியில் அனுமதிப்பத்திரம் இன்றியும் இரவு வேளைகளிலும் மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டுவந்ததாகவும் உண்ணாவிரதத்தில் பங்கேற்ற பொதுமக்கள் தெரிவித்தனர்.
மேற்படி ஆற்றுப்படுக்கையில் மணல் அகழ்வதனால், ஆற்றின் இருமருங்கிலுமுள்ள சுமார் 400 ஏக்கர் வயல் நிலங்கள் பாதிப்படைந்துள்ளதுடன், சுமார் 1,000 ஏக்கர் வரையான காணிகள் மண் அரிப்புக்கும் உள்ளாகின்றன. அத்துடன் சித்தாண்டி, மாவடிவேம்பு, வந்தாறுமூலை, முறக்கொட்டாஞ்;சேனை போன்ற கிராமங்கள் ஆற்றுநீர் வெள்ளமாக பெருக்கெடுப்பதனால் மழைக்காலங்களில் மூழ்கிவிடுகின்றன.
சித்தாண்டி சந்தண மடு ஆற்றின் மணல் அகழ்வினை நிறுத்தி கிராமத்து மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு மிக அன்பாக வேண்டுகின்றோம்.
உண்ணாவிரதம் இருக்கும் இடத்துக்கு ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி தீப்தி விஜயவிக்ரம, ஏறாவூர்ப்பற்று பிரதேச செலாளர் யூ.உதயசிறிதர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கே.துரைராஜாசிங்கம், ஆர்.துரைரெட்ணம் உள்ளிட்டோர்; வருகைதந்தது உண்ணாவிரத்தில் ஈடுபட்டிருக்கும் பொதுமக்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜரை பெற்றுக்கொண்டதுடன், மக்களுடன் கந்துரையாடி உரிய நடவடிக்கைக்கு வழி காண்பதாக உறுதியளித்தனர்.
5 hours ago
5 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
9 hours ago