2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

உள்ளூர் விசாரணை பொறிமுறைக்கு ஹிஸ்புல்லாஹ் தயங்குவது ஏன்?: அப்துல்

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 27 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஊழல் மோசடிகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான  உள்ளூர் விசாரணைப் பொறிமுறைக்கு முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தயங்குவது ஏன் என்று  நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைவர் எம்.எம்.அப்துல் றகுமான் கேள்வியெழுப்பினார்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் காத்தான்குடி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (25)  இரவு  7 மணிக்கு ஆரம்பமாகிய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பினார்.

இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

'கடந்த 2012ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக முறைப்பாடொன்றை  செய்திருந்தோம். அது பதிவுத்தபாலில் அனுப்பப்பட்டது. ஆனால், அந்த முறைப்பாட்டுக்கடிதம் கிடைத்ததென்ற பதிலையாவது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அனுப்பவில்லை. இதுவே இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் கடந்தகால நிலைப்பாடு.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிலுள்ள காலதாமதம் காரணமாகவும் அவர் தப்பித்துக்கொள்ளக்கூடாது என்பதற்காகவும் உள்ளூர் பொறிமுறை விசாரணைக்கு வருமாறு அழைத்தும் ஏன் தயங்குகிறார் என்பதை புரிந்துகொள்ள முடியாதுள்ளது.  இருப்பினும், அவர் தொடர்பாக ஆவணங்கள் தயாரித்துக்கொண்டிருக்கிறோம். மிக விரைவில் அதை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிப்போம்

இதற்காகவே எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உட்பட 18ஆம் திருத்தச்சட்டத்தை அதனை இல்லாமல் செய்ய ஆதரவளித்தனர். ஏனெனில், தாம் செய்த மோசடிகளை இல்லாமல் செய்வதற்காகவே இதைச் செய்தனர். எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அறிவுபூர்வமான, வெளிப்படைத்தன்மையான கருத்தாடல்களுக்கு வருவதில்லை. தான் நிரபராதி என்றால் அவர் வரவேண்டும்

இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் அவர் ஒத்துழைக்கவேண்டும் என்பதை தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகிறோம்  இதற்காக ஊரிலுள்ள புத்திஐPவிகள், உலமாக்கள், சட்டத்தரணிகள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், சமூகசேவை நிறுவனங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதாக உள்ளூர் விசாரணைக்குழு பொறிமுறை அமைப்பு இருக்கவேண்டும் எனக் கூறுகிறோம.;

அதேவேளை, காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பரினால் ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன என்பதற்கான பல ஆதாரங்கள் உள்ளன. அதை நாங்கள் தெரிவித்தும், அவர் ஊழல் மோசடிகள் இடம்பெற்றிருந்தால் நிரூபியுங்கள் எனக் கூறுகிறார்

நகரசபை என்பது வெளிப்படைத்தன்மையான மக்கள் பார்வைக்குட்பட்ட கூட்டங்கள் நடத்தக்கூடிய ஊடகவியலாளர்களை அனுமதிக்கக்கூடிய இஸ்லாமிய பார்வைக்குட்பட்டதாக இருக்கவேண்டும். காத்தான்குடி நகரசபை அவ்வாறில்லை. அனைத்து அறிக்கைகள் ஆவணங்களையும் அவரே வைத்துக்கொண்டு கூறுவதால் சரியாக கூறமுடியாது. காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் ஒத்துழைத்தால் நாங்கள் அதனையும் நிரூபிப்பதுடன், அவர் அவ்வாறான மோசடிகளிலிருந்து திருந்திக்கொள்ளவும் வாய்ப்புள்ளது' எனக் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X