Suganthini Ratnam / 2015 ஜனவரி 27 , மு.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலகம் 2015ஆம் ஆண்டில் பல்வேறு செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாக வாகரை பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.ராகுலநாயகி தெரிவித்தார்.
வருடா வருடம் நடைமுறைப்படுத்தப்படும் அரச செயற்றிட்டங்களுக்கு மேலதிகமாக இந்தத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த வருடம் சுயதொழில் முயற்சியாளர்களுக்கான மாநாட்டை நடத்த தீர்மானித்துள்ளதுடன், வாகரை பிரதேச செயலகம் 2015ஆம் ஆண்டை சுயதொழில் முயற்சியாளர்களுக்கான ஆண்டாக பிரதேச மட்டத்தில் பிரகடனப்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இது விடயமான முதற்கட்ட கலந்துரையாடல் திங்கட்கிழமை (2) பிரதேச செயலாளர் எஸ்.ஆர். ராகுலநாயகியின் பூரண வழிகாட்டலின் கீழ் வாகரை பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
சுயதொழில் முயற்சியினூடாக பொருளாதார ஸ்திரத்தன்மையும் பிள்ளைகளின் கல்வியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தவும் போஷாக்கு நிறைந்த சிறந்த சுகாதார பழக்கவழக்கங்களை கொண்ட வளம்மிக்க கிராமத்தை உருவாக்குவதே இந்த சுயதொழில் மாநாட்டை நடத்துவதின் நோக்கமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

5 hours ago
5 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
9 hours ago