Sudharshini / 2015 ஜனவரி 27 , மு.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். பாக்கியநாதன்
சமூகங்களிடையே ஏற்படும் பிணக்குகளுக்குத் தீர்வு காணும் நோக்கோடு அரச உத்தியோகத்தர்களுக்கான இலவச சட்ட ஆலோசனை வழங்கும் நிகழ்வு, மட்டக்களப்பு நகர பொதுநூலக மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்றது.
இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் மட்டக்களப்பு நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், நிலையத்தின் சட்ட அதிகாரி காமலித் சசிரூபன் விளக்கமளித்தார்.
இதன்போது, குடியிருப்பு, காணி, சொத்துக்கள் பிணக்குகளுக்கான சட்ட ஆலோசனை, பிறப்பு, இறப்பு, விவாகச் சான்றிதழ் பெறுவதற்கான உதவிகள் வழங்கல், பாலியல் மற்றும் குடும்ப வன்முறை தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஆலோசனைகளை சட்ட அதிகாரி தெளிவுபடுத்தியதோடு சட்டத்துக்கு முரணான குற்றச் செயல்களுக்கு, இலவச ஆலோசனை குறித்த நிலையம் வழங்குவதில்லை என கூறினார்.
அத்தோடு, சட்ட உதவி ஆணைக்குழவினால் மனித உரிமைகள், மன ஆற்றுப்படுத்தல் மற்றும் சட்டம் பற்றிய பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுவதாக மேலும் அவர் கூறினார்.
மாவட்டத்திலுள்ள சமுதாய சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட 35 பேர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இலங்கையிலுள்ள 70 மாவட்ட நீதிமன்றங்களிலும் தலா ஒரு மாவட்ட நீதிமன்றத்துக்கு ஒரு சட்ட ஆலோசனை நிலையம் வீதம் 70 இலவச சட்ட ஆலோசனை வழங்கும் நிலையம் செயல்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
5 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
9 hours ago