Suganthini Ratnam / 2015 ஜனவரி 27 , மு.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.பாக்கியநாதன்
இந்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து 23ஆம் திகதிவரையான காலப்பகுதியில் மட்டக்களப்பு நகரில் 44 பேர் டெங்கு நோய் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுள்ளதாக மாவட்ட உதவி சுகாதார அதிகாரி வைத்தியக் கலாநிதி கீர்த்திகா மதனழகன் தெரிவித்தார்.
இது இவ்வாறிருக்க, மட்டக்களப்பு மாநகரசபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களினால் டெங்கு நுளம்புகள் பரவும் இடங்களை பரிசோதிக்கும் நடவடிக்கை மட்டக்களப்பு நகரில் செவ்வாய்க்கிழமை (27) முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிலையில், தாமரைக்கேணி, உப்போடை, கோட்டைமுனை ஆகிய இடங்களிலுள்ள குடியிருப்புகள் மற்றும் வியாபார நிலையங்கள் உள்ளடங்கலாக 146 இடங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை வைத்திருந்த தாமரைக்கேணியில் 06 பேரும் உப்போடையில் 04 பேருமாக 10 பேர் இனங்காணப்பட்டுள்ளதால், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக கோட்டைமுனை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் வி.சி.சகாதேவன் தெரிவித்தார்.
இதேவேளை, கோட்டைமுனை சுகாதார பரிசோதகர் பிரிவில் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை வைத்திருந்ததாக எவரும் இனங்காணப்படவில்லை.
5 hours ago
5 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
9 hours ago