2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

தனியார் பஸ் உரிமையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 27 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

முச்சக்கரவண்டியாளர்களின் செயற்பாடுகளை கண்டித்து, மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடியிலிருந்து படுவான்கரைக்கு போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்ற தனியார் பஸ் வண்டி  உரிமையாளர்கள் செவ்வாய்க்கிழமை (27) பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொண்டனர்.

இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பயணிகள் சிரமத்தை எதிர்நோக்கினர்.

படுவான்கரைக்கு செல்லும் முச்சக்கரவண்டிகள் அதிகளவான பயணிகளை ஏற்றிச்செல்வதாகவும் தனி நபர் கட்டண அறவீடுகளை மேற்கொள்வதாகவும் கூறியே இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டது.

இது தொடர்பில்  தனியார் பஸ் உரிமையாளர்களுக்கும் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுனத் நந்தவல தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து பணிப்பகிஷ்கரிப்பு நிறைவுற்றது.

படுவான்கரை பிரதேசத்தில் சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகள் தொடர்பில் கண்காணிப்பில் ஈடுபடுவது எனவும் சட்டத்துக்கு  முரணாக ஈடுபடுவோர் மீது  நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பேச்சுவார்த்தையின்போது தெரிவிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X