2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'மாறிவரும் உலகமயமாக்களில் ஊடக ஒழுக்க கோவை' மாநாடு

Gavitha   / 2015 ஜனவரி 27 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மாறிவரும் உலகமயமாக்களில் ஊடக ஒழுக்க கோவை எனும் தலைப்பிலான சர்வதேச மாநாடு ஒன்று கொழும்பில் செவ்வாய்க்கிழமை (27) காலை ஆரம்பமானது.


இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில் கொழும்பு கோட்டையிலுள்ள கிங்ஸ் பெறி ஹோட்டலில் இந்த மாநாடு நடைபெற்றது.


இந்த மாநாட்டில் அமெரிக்கா மற்றும் இந்தியா பாகிஸ்தான், மியன்மார், நேபால் போன்ற நாடுகளிலிருந்தும் இலங்கையில் இருந்து சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.


இந்த மாநாட்டில் உலகமயமாக்களில் ஊடக ஒழுக்க கோவை மற்றும் முரண்பாட்டுச் சூழலில், ஊடகங்களின் சமநிலை போன்ற பல்வேறு தலைப்புக்களில் கருத்துரைகளும் கலந்துரையாடல்களும் இடம் பெறுகின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X