2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வெள்ளத்தால் 95,000 ஏக்கர் நெற்செய்கை பாதிப்பு

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 28 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 147,000 ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை பண்ணப்பட்ட  நிலையில், அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அறுவடை செய்யமுடியாமல் 95,000 ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கமத்தொழில் சேவைகள் உதவிப்பணிப்பாளர்  எஸ்.சிவலிங்கம் தெரிவித்தார்.

எந்தவித பாதிப்பும் அற்ற நிலையில் சாதாரணமாக ஏக்கரொன்றுக்கு 20 மூடைகள்  நெல் பெறப்படுகின்றது. ஆனால்,   அண்மையில் ஏற்பட்ட  வெள்ளத்தினால்; பாதிப்புக்குள்ளான வயல்களில் ஏக்கரொன்றுக்கு 5 நெல்  மூடைகள் மாத்திரமே பெறப்படுவதாகவும் அவர் கூறினார்.

மழையை நம்பி கூடுதலான ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை பண்ணப்பட்ட  நிலையில், மாவட்டத்தில் 52,000 ஏக்கர் மட்டுமே வெள்ளத்திலிருந்து பாதுகாக்கப்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரையும் எந்தவித மானியமும் வழங்கப்படவில்லை என்று  விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் நெற்செய்கையில் 4ஆவது இடத்தை பெற்ற மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை, வெல்லாவெளி, வவுணதீவு, கிரான், செங்கலடி, வாகரை, ஓட்டமாவடி, வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுகளில் அதிகளவில்  பெரும்போக நெற்செய்கை பண்ணப்படுகின்றமை  குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க, பெரும்போக நெற்செய்கை அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தின்  திருப்பெருந்துறையில் செவ்வாய்க்கிழமை (27) அறுவடை இயந்திரம் மூலம் நெல் அறுவடை  செய்யப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X