2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சந்திரிகா – சல்மா ஹம்சா சந்திப்பு

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 28 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாநாயக்க குமாரதுங்கவிடம் தான் வேண்டுகோள் விடுத்ததாக காத்தான்;குடி நகரசபை உறுப்பினரும் பெண்களுக்கான வலவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளருமான சல்மா ஹம்சா தெரிவித்தார்.

கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை சந்தித்தபோது, இந்த வேண்டுகோளை விடுத்ததாகவும் அவர் கூறினார்.

இலங்கையில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கச் செய்வதுடன், பெண்களின் உரிமை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை விடயத்திலும் கூடிய கவனம் செலுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தான்  கேட்டுக்கொண்டதாக சல்மா ஹம்சா தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X