Suganthini Ratnam / 2015 ஜனவரி 28 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடைப் பண்ணையாளர்களின் பாதுகாப்பு மற்றும்; மேய்ச்சல்தரைக்குரிய காணிகளை உறுதிப்படுத்துமாறும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் மாவட்ட கால்நடை வளர்ப்போர் கமநல அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு புதன்கிழமை (28) வருகைதந்த கால்நடை வளர்ப்போர் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள், மாவட்ட அரசாங்க அதிபரிம் மகஜரையும் கையளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, கால்நடை வளர்ப்போரின் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
மேற்படி மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'மட்டக்களப்பு மாவட்டத்தில் செங்கலடி, கிரான், பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காணிகளை மேய்ச்சல்தரைக் காணிகளாக நீண்டகாலமாக பயன்படுத்திவருகிறோம். இந்த நிலையில், மயிலத்தமடு, மாதவணை பகுதிகளில் 27ஆம் திகதி அன்று அதிகாலை 5 மணியளவில் வனவிலங்குப் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகஸ்;தர்களால் 15 கால்நடைப் பண்ணையாளர்கள் கைதுசெய்யப்பட்டு, தெஹ்யத்தகண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மாலை பிணையில் விடுவிக்கப்பட்டனர். அத்துடன், எதிர்வரும் 10ஆம் திகதி நீதிமன்றத்துக்கு சமூகமளிக்குமாறும் இவர்கள் பணிக்கப்பட்டுள்ளனர்.
எங்களுக்கு எதிராக அத்துமீறி வனஜீவராசிகளது பிரதேசத்துக்குள் உள்நுழைந்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கால்நடை வளர்ப்போரை பொறுத்தவரையில் இந்தப் பிரதேசத்தில் கால்நடைப் பண்ணையாளர்களின்; பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும். அத்துடன், கால்நடைகளுக்கான காணிகளை வரையறை செய்து, இதனூடாக மாவட்ட எல்லையையும் உறுதிப்படுத்தவேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா, சீ.யோகேஸ்வரன், மாகாணசபை உறுப்பினர்களான கே.துரைராஜசிங்கம், ஆர்.துரைரெட்ணம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
5 hours ago
5 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
9 hours ago