Sudharshini / 2015 ஜனவரி 28 , மு.ப. 08:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட மூவரில் இருவரை எதிர்வரும் 09ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி அப்துல் றியாழ் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், மூன்றாவது சந்தேக நபரை விடுதலை செய்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 18ஆம் திகதி களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இரண்டு வீடுகள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டமை தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துவந்தனர். இந்நிலையில், பிரதேச பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் மட்டக்களப்பு மற்றும் மாமாங்கம், திருக்கோவில் பிரதேசங்களை சேர்ந்த மூவரை பொலிஸார் கைதுசெய்தனர்.
இந்தச் சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, அவர்களிடமிருந்து இரண்டு ஐபோன், ஐந்து பவுண் தங்கநகைகள்;, கமெரா மற்றும் பணம் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
5 hours ago
5 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
9 hours ago