Suganthini Ratnam / 2015 ஜனவரி 30 , மு.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
புதிய அரசாங்கம் ஆட்சி அமைத்ததை தொடர்ந்து, வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு தேர்தல் தொகுதிக்கும் வழங்கப்பட்ட 300 வீடுகளில் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு 72 வீடுகள் கிடைத்துள்ளதாக அப்பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.ராகுலநாயகி தெரிவித்தார்.
இந்த வீடுகளை வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காயாங்கேணி வன்னிச்சி நகர் கிராமத்தில் அமைப்பதற்கான முதற்கட்ட கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை காயாங்கேணி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள 72 குடும்பங்கள் இந்த வீடமைப்புத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர். பத்து வருட காலத்தில் மாதாந்தம் ஆயிரம் ரூபாய் திருப்பிச்செலுத்தும் கடன் அடிப்படையில் ஒரு இலட்சம் ரூபாய், பயனாளிகளுக்கு மூன்று தவணைகளில் வழங்கப்பட இருப்பதாக பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.ராகுலநாயகி தெரிவித்தார்.
இரண்டு மாதகாலத்தில் இவ்வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு எதிர்வரும் ஏப்ரல் மாதம் பயனாளிகள் குடியிருப்பதற்கு வசதியாக வீடுகள் கையளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதன்போது வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் அனுசரணை மற்றும் ஆலோசனையுடன், பிரதேச செயலாளரின் வழிகாட்டலுடன் வீடமைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான உத்தியோகஸ்தர்களின் கடமைப் பொறுப்பும் கிராம வீடமைப்புக்குழுவின் கடமைப் பொறுப்பும் வலியுறுத்தப்பட்டன.
இக்கூட்டத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் எம்.ஜெகநாதன் உட்பட பல்வேறு திணைக்கள உத்தியோகத்தர்களும் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

3 hours ago
3 hours ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
7 hours ago