Gavitha / 2015 ஜனவரி 31 , மு.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
கிழக்கு மாகாணத்திலுள்ள உலமாக்களுக்கான இரண்டு நாள் தலைமைத்துவ பயிற்சி செயலமர்வு சனிக்கிழமை (31) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் ஆரம்பமானது.
சவுதி அரேபியா இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சின் உதவியுடன் மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியினால் நடத்தப்படும் இந்த செயலமர்வு ஞாயிற்றுக்கிழமை (01) மாலை நிறைவு பெறவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா ஹிறா பவுன்டேசன் நிறுவனத்தின் தலைவரும் மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியின் ஆளுநர் சபை தலைவருமான முன்னாள் பிரதியைமச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் தலைமையில் இதன் ஆரம்ப வைபவம் நடைபெற்றது.
இந்த செயலமர்வில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 500 உலமாக்கள் பள்ளிவாயல்களின் கதீப்மார் இமாம்கள் கலந்து கொண்டுள்ளனர்.


3 hours ago
3 hours ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
7 hours ago