Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 09 , மு.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
கிழக்கு பல்கலைக்கழகத்தின் கீழுள்ள மட்டக்களப்பு, கல்லடி சுவாமி விபுலானந்த அழகியற்கற்கைகள் நிறுவகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மாணவர் விடுதி திங்கட்கிழமை (9) திறந்துவைக்கப்பட்டது.
உயர் கல்வியமைச்சின் 150 மில்லியன் ரூபாய் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த மாணவர் விடுதிக் கட்டம், 100 அறைகளை கொண்டமைந்துள்ளதுடன், 400 மாணவர்கள் தங்கக்கூடிய வகையிலும்; வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக சுவாமி விபுலானந்த அழகியற்கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.பிறேம்குமார் தெரிவித்தார்.
கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜாவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிறின்ஸ் காசிநாதரும் இணைந்து புதிய விடுதியை திறந்துவைத்தனர்.
சுவாமி விபுலானந்த அழகியற்கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.பிறேம்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுவாமி விபுலானந்த அழகியற்கற்கைகள் நிறுவகத்தின் பிரதி பதிவாளர் ரி.விஜயகுமார், பேரவை உறுப்பினர்கள், கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதிகள் மற்றும் விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
2 hours ago
2 hours ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
6 hours ago