2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கல் உற்பத்தி தொழிற்சாலையில் தீ

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 10 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளியிலுள்ள சீமெந்து கல் உற்பத்தி தொழிற்சாலையொன்றுக்கு  திங்கட்கிழமை (09) அதிகாலை தீ வைக்கப்பட்டதுடன், இத்தொழிற்சாலையில் காவல் கடமையிலிருந்த காவலாளி மற்றும் உத்தியோகஸ்தர்கள் இருவர் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்கள் வாழைச்சேனை தள வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டு, பின்னர் மட்டக்களப்பு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

பெற்றோல் குண்டு, கல் மற்றும் மிளகாய்த்தூள் போன்றவற்றை பயன்படுத்தி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, கணினி அலுவலகத்திலுள்ள கணினி மற்றும் ஆவணங்கள் சில சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X