Princiya Dixci / 2015 பெப்ரவரி 11 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல்,ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு, இலுப்படிச்சேனைக் கிராமத்தின் கிணறு அமைக்கும் பணிக்காக 05 சீமெந்து மூட்டைகளை இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை, திங்கட்கிழமை (09) வழங்கி வைத்தது.
இலுப்படிச்சேனைக் கிராமத்தில் வசித்துவரும், கணேசமூர்த்தி றஜனிக்காந் என்ற விசேட தேவையுடையவர் அமைத்துவரும் கிணற்றின் பணிகளுக்கே இவ்வாறு சீமெந்துப் மூட்டைகள் வழங்கப்பட்டன.
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைத் தலைவர் த.வசந்தராசா இதனை வழங்கி வைத்தார்.
கணேசமூர்த்தி றஜனிக்காந், இலுப்படிச்சேனைக் கிராமத்தில் நிலவிவரும் குடி நீர் பிரச்சினையிலிருந்து மீளும் எண்ணத்தோடு தான் குடியிருக்கும் காணியினுள் கிணறு ஒன்றை அமைத்துக்கொள்வதற்காக முயற்சித்து பலரின் உதவியோடு கிணறு ஒன்றை கட்ட ஆரம்பித்துள்ளார்.
எனினும், அதனைப் பூரணப்படுத்திக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவந்த நிலையிலேயே இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையினால் இந்த சீமெந்து மூட்டைகள் வழங்கப்பட்டன.
இக்கிணறு பூர்த்தி செய்யப்படுமிடத்து தனக்கு மட்டுமன்றி அக்கிராமத்தின் ஒரு பகுதியினரும் தமது குடி நீர் தேவையை நிறைவேற்ற முடியும் என கணேசமூர்த்தி றஜனிக்காந் தெரிவித்தார்.
இது போன்ற சுய முயற்சிகளை பூர்திசெய்ய கஷ்டப்படும் மக்கள் மத்தியிலேயே தமது மனிதாபிமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைத் தலைவர் த.வசந்தராசா தெரிவித்தார்.

2 hours ago
2 hours ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
6 hours ago