Gavitha / 2015 பெப்ரவரி 01 , மு.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி ஊர் வீதியை அபிவிருத்தி செய்வதற்கான ஆரம்ப வைபவம் சனிக்கிழமை (31) காத்தான்குடி ஊர் வீதியிலுள்ள சின்னப்பள்ளிவாயலுக்கு அருகில் நடைபெற்றது.
காத்தான்குடி ஊர் வீதியை காபட் இட்டு, வீதியின் இருபகுதிகளிலும் வடிகான்கள் அமைத்து அபிவிருத்தி செய்வதற்காக 320 மில்லியன் ரூபாய் நிதி, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஏற்பாட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக காததான்குடி நகர சபையின் தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.
காத்தான்குடி நகர சபையின் தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில், முன்னாள் பிரதியைமச்சரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், காத்தான்குடி நகர சபையின் பிரதி தலைவர் எம்.ஐ.எம்.ஜெஸீம், நகர சபை உறுப்பினர் எம்.எஸ்.சியாத் உட்பட முக்கியஸ்தர்கள் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

3 hours ago
3 hours ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
7 hours ago