2025 மே 20, செவ்வாய்க்கிழமை

தொழில் முயற்சியாளர்களுக்கான செயலமர்வு

Suganthini Ratnam   / 2015 மார்ச் 01 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில், மாவட்டத்திலுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு,  மட்டக்களப்பு கோப் இன் விடுதியில் நேற்று சனிக்கிழமை  நடைபெற்றது.

இலங்கை நிர்வாகஸ்தர் ஒன்றியமும் சர்வதேச நிதி கூட்டுத்தாபனமும் இணைந்து பொறுப்புள்ள வியாபாரத்தை  எவ்வாறு மேற்கொள்வது எனும் தலைப்பில் இந்த செயலமர்வு நடைபெற்றது.

இந்த செயலமர்வில் இலங்கை நிர்வாகஸ்தர் ஒன்றியத்தின் சிரேஸ்ட உப தலைவர் சிரோமால் குரோ,  அதன் பிரதம நிறைவேற்றுனர் லிலானி பெரேரா, சர்வதேச நிதி கூட்டுத்தாபனத்தின் இலங்கைக்கான வதிவிட முகாமையாளர் அடம் செக், மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் நிறைவேற்று உத்தியோகஸ்தர் கே.குஹதாஸ் உட்பட அதன் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது கம்பனிகளை பதிவு செய்வது தொடர்பிலும் நிதி முகாமைத்துவம் வரி தொடர்பாகவும் தொழில் முயற்சியாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டன.  மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஐம்பது தொழில் முயற்சியாளர்கள்  இதில் கலந்துகொண்டதாக மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் நிறைவேற்று உத்தியோகஸ்தர் கே.குஹதாஸ் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X