Suganthini Ratnam / 2015 மார்ச் 01 , மு.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எம்.அஹமட் அனாம்
நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், நல்லாட்சிக்கான மாற்றம் என்று புதிய ஜனாதிபதி ஆட்சியை பொறுப்பெடுத்துள்ளார். இந்த மாற்றத்தில் அதிகளவான பங்கு தமிழர்களுடைய பங்கு என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை என கிழக்கு மாகாணசபையின் உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
கல்குடா கல்வி வலயத்திலுள்ள பேத்தாழை விபுலானந்தா கல்லூரியின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டியின் இறுதி நாள் நிகழ்வு, வித்தியாலய மைதானத்தில் சனிக்கிழமை (28) நடைபெற்றது. இதில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வியை ஏற்றுக்கொண்டு தற்போதுள்ள அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று எங்களுடைய பணிகளை ஆற்றிக்கொண்டிருக்கிறோம். இந்த அரசாங்கத்தில் தமிழர்களுடைய பங்கு என்ன? அவர்களுக்கு தற்போது கிடைத்துள்ள நன்மை என்ன? என்று பார்க்கின்றபோது, பல குழப்பங்கள் உள்ளன.
குறிப்பாக, நூறு நாள் வேலைத்திட்டத்தில் தமிழர்களுடைய பங்களிப்பாக அவர்கள் வேண்டிநின்ற அதிகாரப்பகிர்வு முறையில் என்ன மாற்றம் இடம்பெற்றுள்ளது? அது எழுத்துருவில் வராவிட்டலும், பேச்சலவிலாவது வந்துள்ளது என்று பார்த்தால் எதுவும் இல்லை.
இந்த மாற்றத்தினூடாக தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தருவோம் என்று கூறிய கட்சிகள், தமிழர்களுக்கு எதை பெற்றுக்கொடுக்கப் போகின்றார்கள் என்பதை அவதானித்துக்கொண்டிருக்கிறோம். தலைவர்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பியதால், தமிழர்களுக்கு எதனை பெற்றுக்கொடுக்கப் போகின்றார்கள் என்பதை வாக்களித்த மக்களும் அவதானமாக பார்க்கவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு ஆகும்' என்றார்.
6 minute ago
47 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
47 minute ago
58 minute ago
1 hours ago