Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 மார்ச் 01 , மு.ப. 09:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
இந்த நாட்டின் முதுகெலும்பு விவசாயிகளே. அவர்களை முன்னேற்றவேண்டிய தேவை அதிகாரிகளுக்கு உண்டு என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை) தெரிவித்தார்.
மட்டக்களப்பு, கோரளைப்பற்று தெற்கு பிரிவுக்கான விவசாய ஆரம்பக்கூட்டம் சனிக்கிழமை (28) கோரகல்லிமடு ரெஜி கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,
'மக்களின் கேள்விகளுக்கு அதிகாரிகள் அளிக்கும் பதில், மக்களை துன்புறுத்துவதாக அமையக்கூடாது. மக்களுக்கு சேவை செய்யவே அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அதற்காகவே அவர்களுக்கு வேதனம் வழங்கப்படுகின்றது.
இந்த கூட்டத்தின்போது விவசாயிகளின் குறைகள், தேவைகளுக்கு அமைவாக விவசாயிகளினால் தொடுக்கப்பட்ட வினாக்களுக்கு உரிய பதில் உரிய அதிகாரிகளிடமிருந்து வரவில்லை. இதனை நான் நன்கு அவதானித்துக்கொண்டிருந்தேன். அதிகாரிகள் மக்களின் கருத்துக்களுக்கு செவிசாய்க்கவேண்டும்.
அரசியல்வாதிகளாக இருக்கலாம். அதிகாரிகளாக இருக்கலாம். நாம் மக்களுக்கு சேவையாற்ற வந்தவர்கள். மக்களின்றி நாம் இல்லை. இதனைக் கருத்தில் கொண்டு மக்களின் கோரிக்கைக்கு உரிய பதிலை உரிய முறையில் வழங்கவேண்டும்.
எமக்கு முன் வீற்றிருப்பவர்கள் வேறு யாருமில்லை. விவசாயிகளை சாதாரணமாக எடை போடமுடியாது. இந்த நாட்டின் முதுகெலும்பு விவசாயிகள். அவர்களை முன்னேற்றவேண்டிய தேவை அதிகாரிகளுக்கு உண்டு. அதனை விடுத்து அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் விடுதல் அல்லது உதாசீனம் செய்தல் சாதாரண விடயமாக கருதமுடியாது.
விவசாயிகளின் கருத்தை கேட்டு அவற்றுக்கு அமைவாக அதிகாரிகள் செயற்படவேண்டும். விவசாயிகளின் மனதை துன்புறுத்துவதாக கருத்துக்கள், பதில்கள் இனி ஒருபோதும் அமையக்கூடாது' எனக் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
4 hours ago