Princiya Dixci / 2015 மார்ச் 01 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
கிழக்கு மாகாண சபையின் தவிசாளருக்குரிய கடமைகளை கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைரிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.
இது தொடர்பாக, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி ஆரிபதி கலபதி, சனிக்கிழமை (28) தனக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக பிரதி தவிசாளர் சுபைர் குறிப்பிட்டார்.
இதனடிப்படையில் கிழக்கு மாகாண சபையின் அடுத்த அமர்வுக்கு தான் தலைமை தாங்கவுள்ளதாகவும் சபைக்கான தவிசாளர் தெரிவு தனது தலைமையிலேயே இடம்பெறுமெனவும் சுபைர் மேலும் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாண சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி ஆரிபதி கலபதி கிழக்கு மாகாண கல்வி மற்றும் காணி அமைச்சராக, வெள்ளிக்கிழமை (27) சத்தியப் பிரமாணம் செய்தமை குறிப்பிடத்தக்கது.
4 minute ago
45 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
45 minute ago
56 minute ago
1 hours ago