Sudharshini / 2015 மார்ச் 01 , பி.ப. 02:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட திருமலை வீதியிலுள்ள வர்த்தக நிலையங்களில் பொதுச்சுகாதார பரிசோகர்கள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்துக்கொண்ட மற்றும் நுளம்பு பெருக்கத்துக்கு ஏதுவான முறையில் சூழலை வைத்திருந்த 10 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கவுள்ளதாக வெட்டுக்காடு பொதுச்சுகாதார பரிசோதகர் சோமசுந்தரம் அமுதமாலன் தெரிவித்தார்.
நேற்று சனிக்கிழமை (28) காலை தொடக்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை (01) காலை வரை மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தின் சுற்றாடல் பிரிவு பொலிஸாரும் பொதுச்சுகாதார பரிசோதகர்களும் இணைந்து இந்த நடவடிக்கையினை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
எட்டு பொதுச்சுகாதார பரிசோதகர்களும் பத்து பொலிஸாரும் இணைந்து ஐந்து குழுவாக சோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.
இதன்போது 64 வர்த்தக நிலையங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டதாகவும் வெட்டுக்காடு பொதுச்சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
சுகாதார சீர்கேடுகளை தடுத்து மக்கள் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன்போது நுளம்பு பெருக்கத்துக்கு ஏதுவாக சூழலை வைத்திருந்த பத்து பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர்; தெரிவித்தார்.
4 minute ago
45 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
45 minute ago
56 minute ago
1 hours ago