Gavitha / 2015 மார்ச் 02 , மு.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினால் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப் பற்று பாலமுனைக் கிராமத்துக்கான கிராம மட்டக் குழு நியமிக்கப்பட்டது.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பாலமுனைக் கிராமத்துக்கான கிராம மட்டக் குழுவைத் தெரிவு செய்வதற்கான கூட்டம், ஞாயிற்றுக்கிழமை (01) பாலமுனை கிராம அவிபிருத்திச் சங்கக் கட்டடத்தில் இடம்பெற்றது.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜவாத் ஆசிரியர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற மேற்படி கூட்டத்தில், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் எம்.பி.எம்.பிர்தௌஸ் நளீமி, காத்தான்குடி நகரசபை உறுப்பினர் எம்.எச்.ஏ.மிஹ்ழார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கிராம மட்டக் குழுக்களை நிறுவுதல், தேசிய வேலைத்திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
இதன்போது 16 பேர் கொண்ட பாலமுனைக் கிராமத்துக்கான கிராம மட்டக்குழு ஒன்றும் தெரிவு செய்யப்பட்டது.
இக்குழுவானது, எதிர்காலத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் அரசியல் மற்றும் சமூக வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் எம்.பி.எம்.பிர்தௌஸ் நளீமி தெரிவித்தார்.

3 minute ago
44 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
44 minute ago
55 minute ago
1 hours ago