2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மாரடைப்பினால் கடமையிலிருந்த இராணுவ வீரர் மரணம்

Gavitha   / 2015 மார்ச் 02 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம்,எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு தொப்பிகல இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ வீரர், ஞாயிற்றுக்கிழமை (01) கடமையில் இருந்தபோது, மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக, வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

மாவனல்ல பிரதேசத்தைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் செனவிரட்ன ஜேபி (வயது 58) என்ற இராணுவ வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை இராணுவத்தினர் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X