2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பில் புதிய மதுபானச்சாலைகளுக்கு அனுமதிக்கக்கூடாதென தீர்மானம் நிறைவேற்றம்

Suganthini Ratnam   / 2015 மே 07 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக மதுபானச்சாலைகள் திறப்பதற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட செயலக மண்டபத்தில்   வியாழக்கிழமை (07) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்திலேயே, இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த மாவட்டத்தில் புதிதாக மதுபானச்சாலைகள் திறப்பதற்கு அனுமதி வழங்கக்கூடாது  என்பதுடன், வேறு மாவட்டங்களிலுள்ள மதுபானச்சாலைகளை இடமாற்றிக் கொண்டுவந்து  இந்த  மாவட்டத்தில் திறப்பதற்கும் அனுமதி வழங்கக்கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன்,   இது தொடர்பில்  மதுவரித் திணைக்கள ஆணையாளருக்கு அறிவிப்பதற்கும்; தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள  வறுமை நிலைமை மற்றும் மக்களின் வாழ்வதாரத்தை  கருத்திற்கொண்டு இந்தத்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக   மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரும் வீடமைப்பு மற்றும் சமுர்த்தி பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபாவனைக்கு எதிராக மக்களை விழிப்புணர்வூட்டும் வகையில்  விழிப்புணர்வு பேரணியொன்றை நடத்தவுள்ளதுடன், இதற்கான   ஏற்பாடுகளை கவனிப்பதற்காக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரத்தினத்தை மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் நியமித்துள்ளதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .