2025 மே 17, சனிக்கிழமை

கூரைமீது ஏறி கைதிகள் ஆர்ப்பாட்டம்

A.P.Mathan   / 2015 மே 07 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு சிறைச்சாலைக் கைதிகள் இருவர், இன்று வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் சிறைச்சாலைக் கூரை மீதேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஆணையாளர் அல்லது மாவட்ட நீதிபதி தம்மை நேரில் வந்து சந்திக்கும் வரை தாங்கள் கூரையை விட்டு கீழிறங்கப் போவதில்லை எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டவிரோத ஆயுதம் வைத்திருந்தமை மற்றும் பயமுறுத்திக் கப்பம் பெற்றமை தொடர்பாகக் கைது செய்யப்பட்டு, மறியலில் வைக்கப்பட்டுள்ள கந்தசாமி புஸ்பராஜா (வயது 30) மற்றும் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய சந்தேக நபர் என்ற குற்றச்சாட்டின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கதிர்வேல் கபிலன் (வயது 26) ஆகியோரே சிறைச்சாலைக் கூரை மீது ஏறியமர்ந்துள்ளனர்.

தற்போது சிறைச்சாலைப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஆர்ப்பாட்டம் நடத்தும் கைதிகளைக் கூரையிலிருந்து கீழிறக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .