2025 மே 17, சனிக்கிழமை

முன்னாள் புலி உறுப்பினர் கைது

Kanagaraj   / 2015 மே 09 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன், வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்

முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் ( எல்ரீரீஈ) இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரான நாகமணி ஜெகதீஸ்வரன் (வயது 34) என்பவரை இன்று சனிக்கிழமை கைது செய்துள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

2003ஆம் ஆண்டு ரெலோ இயக்கத்தைச் சேர்ந்த இரண்டு அங்கத்தவர்களை மட்டக்களப்பு – ஆரையம்பதியில் வைத்து துப்பாக்கியால் சுட்டு கைக்குண்டுகளையும் வீசி ஆட்கொலை புரிந்தார், எட்டுப்பேரை காயப்படுத்தினார் என்ற முறைப்பாட்டின் பிரகாரமே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மகிழடித்தீவு கொக்கட்டிச்சோலையில் திருமணம் முடித்த நிலையில் மத்திய கிழக்கு நாட்டுக்கு சென்றுவிட்டு திரும்பிவந்து கொக்கட்டிச்சோலையிலேயே தலைமறைவாகி வசித்து வந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை, நீதிமன்றில் முன்னிறுத்த நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .