2025 மே 17, சனிக்கிழமை

வீட்டிலிருந்த 10 பவுண் நகை மற்றும் பணம் திருட்டு

Sudharshini   / 2015 மே 09 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு முதலாம் குறிச்சியிலுள்ள வீடொன்றை உடைத்து வெள்ளிக்கிழமை (08) இரவு உட்புகுந்த திருடர்கள், அங்கிருந்த 10 பவுண் நகை மற்றும் பத்தாயிரம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர் என களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

வீட்டு உரிமையாளர்கள் நித்திரையில் இருந்த சந்தர்ப்பத்தை தமக்கு சாதகமாக்கிக்கொண்டு, திருடர்கள் தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் வீட்டுரிமையாளர், களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .