Suganthini Ratnam / 2015 ஜூலை 20 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் தெங்குச் செய்கையை பரவலாக ஊக்குவிக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக மாவட்ட தென்னை பயிர்ச்; செய்கைச்சபையின் பிராந்திய முகாமையாளர் பிறேமினி ரவிராஜ் தெரிவித்தார்.
தென்னை பயிர்ச் செய்கையை ஊக்குவிக்கும் 2015ஆம் ஆண்டை இலக்கு வைத்த 'கப்றுக' செயற்றிட்ட பயிற்சிக் கருத்தரங்கு, பாசிக்குடாவிலுள்ள கிழக்கு தெங்கு அபிவிருத்திப் பயிற்சி நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் இதைக் கூறினார்.
தென்னை அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், தென்னை பயிர்ச் செய்கைச்சபையின் ஏனைய உத்தியோகஸ்தர்கள் உட்பட சுமார் 35 பேர் இப்பயிற்சியில் கலந்துகொண்டனர்.
தென்னங்காணிகளின் அபிவிருத்திக்காக மானிய உதவிகளை தெங்குச் செய்கையாளர்களுக்கு வருடம் தோறும் தென்னை பயிர்ச் செய்கைச்சபை வழங்குகின்றது.
தென்னை பயிர்ச் செய்கைச்சபையினால் வழங்கப்படும் 'கப்றுக ஆயோஜன' கடன் திட்டத்தின் கீழ், 2015ஆம் ஆண்டில் 100 ஏக்கர் தென்னங்காணிகளின் அபிவிருத்திக்காக கடன் வசதி செய்துகொடுக்கப்பட்டது. இதற்கான இலகு கடனை நான்கு சதவீத ஆண்டு வட்டியின் அடிப்படையில் எந்த வங்கியினூடாகவும் பெறமுடியும்.
தென்னை பயிர்ச் செய்கைச்சபையினால் வழங்கப்படும் இந்த உதவிகள் பணமாகவோ, உள்ளீடாகவோ தெங்கு செய்கையாளர்களுக்கு கிடைக்கின்றன எனவும் அவர் கூறினார்.
மேலதிக தொடர்புகளுக்கு மட்டக்களப்பு மயிலம்பாவெளியிலுள்ள தென்னை பயிர்ச் செய்கைச்சபை, பிராந்திய அலுவலகத்துடன் தொடர்புகொள்ள முடியும்.

15 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
4 hours ago
4 hours ago