Suganthini Ratnam / 2015 ஜூலை 21 , மு.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சபேசன்,ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, பட்டிருப்புக் கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலையொன்றில் இரவுவேளைக் காவலாளியாக கடமையாற்றிவந்த இளைஞன் சடலமாக நேற்று செவ்வாய்க்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்மாந்துறையில் வசிக்கும் அகமட் லெப்பை முகமட் சபீக் (வயது 23) என்ற இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
மேற்படி பாடசாலைக்கு திங்கட்கிழமை (20) இரவு காவலுக்கு சென்ற இந்த இளைஞன் கதிரையில் உட்கார்ந்திருந்ததைக் கண்டு பாடசாலைக்கு வந்த மாணவர்கள் அழைத்துள்ளனர். இதன்போது, இக்காவலாளி எதுவும் பேசாமல் இருந்தமையால், ஆசிரியர்கள் மற்றும் அதிபருக்கு மாணவர்கள் தெரியப்படுத்தினர். இந்த நிலையில் வெல்லாவெளிப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வருகைதந்து சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
2 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago