Suganthini Ratnam / 2015 ஜூலை 22 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா,எஸ்.பாக்கியநாதன்
கிழக்கு மாகாணத்தில் பாரிய உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள், மின்சக்தியை குறைத்து அதன் மூலம் வருமானம் பெருக்குவது தொடர்பான விசேட செயலமர்வு இன்று புதன்கிழமை மட்டக்களப்பில் ஆரம்பமானது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள உற்பத்தியாளர்களின் நன்மை கருதி ஜி.ரி.ஸற், மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனம் மற்றும் ஹற்றன் நசனல் வங்கி என்பன இணைந்து இந்த செயலமர்வை ஏற்பாடு செய்தது.
இந்த நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு,கல்லடியில்; உள்ள கிரின் கார்டன் விடுதியில் நடைபெற்ற இந்த செயலமர்வு 'சக்தி வினைத்திறன் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்திகள் மீதான பயிற்சி பயிற்சிப்பட்டறை' எனும் தலைப்பில் ஆரம்பமாகியது.
இதன்போது மட்டக்களப்பு மற்றும் அம்பாறை,திருகோணமலை மாவட்டங்களில் பாரிய உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடும் உற்பத்தியாளர்கள் கலந்துகொண்டனர்.
15 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
4 hours ago
4 hours ago