2025 மே 15, வியாழக்கிழமை

'இணைந்து செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளோம்'

Suganthini Ratnam   / 2015 ஜூலை 27 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

இணைந்த வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைப்  பெற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாக   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் தங்கத்துரை மற்றும் தளபதி குட்டிமணி ஆகியோரின் 32 ஆவது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு மட்டக்களப்பிலுள்ள அதன் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (26)  நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்விலேயே, அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், 'எமது மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டதனால், அவற்றைப் பெறும் நோக்கோடு அகிம்சைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அது வெற்றி அளிக்காத நிலையில் பின்னர் ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நாங்கள் வன்முறை மீது காதல் கொண்ட மன நோயாளிகளோ அல்லது அதன் மீது வெறி கொண்டவர்களோ அல்ல. மாறாக, ஆசிய தேசமென்றாலும் ஆபிரிக்க தேசமென்றாலும்  மக்களின் உரிமைகள் மறுக்கப்படும்போது  தமிழர்களுக்காக குரல் கொடுப்போம் ' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .