2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

மீராவோடையில் ஐ.தே.க. ஆதரவாளர்கள் இருவர் மீது தாக்குதல்

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 11 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  மீராவோடைப் பிரதேசத்தில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் இருவர் தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீராவோடை பிரதான வீதியைச் சேர்ந்த ஏ.எஸ்.பைரூஸ் (வயது 36) மற்றும் மீராவோடை ஹாஜியார் வீதியைச் சேர்ந்த எம்.எச்.பௌசான் (வயது 28) ஆகியோரே காயமடைந்துள்ளனர்.

திங்கட்கிழமை (10) இரவு மீராவோடை ஜும்மா பள்ளிவாசல் சந்தியில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி காரியாலயத்தில் இந்த இளைஞர்கள் இருந்துள்ளனர். இதன்போது, இரண்டு வாகனங்களில் வந்ததாகவும் அதில் ஒரு வாகனத்தில் வந்தவர்கள் வாள்,  கத்தி போன்ற ஆயுதங்களால் தங்களை தாக்கியதாக பாதிக்கப்பட்ட இருவரும் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X