2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

மீன்களின் உற்பத்திக்கு ஏதுவாக மட்டு. வாவிக்கு அருகில் மரங்கள் நட ஏற்பாடு

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 13 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு மாவட்ட கரையோரம் பேணல் திணைக்களத்தினால் மட்டக்களப்பு வாவியை எல்லைப்படுத்திய பின்னர் மீன்கள் உற்பத்திக்கு ஏதுவாக இருக்கும் மரங்களை வாவிக்கு அருகில் நடவுள்ளதாக  கரையோரம் பேணல் திணைக்களத்தின் மாவட்ட முகாமையாளர் ஏ.கோகுலதீபன் தெரிவித்தார்.

விசேட முகாமைத்துவத் திட்டத்தின் கீழ், பெரிய நீலாவணை முதல் செங்கலடி வரையுள்ள வாவிக் கரையோரம், கொக்கட்டிச்சோலை மற்றும் படுவான்கரை ஏரியை அண்டிய பிரதேசம் சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்கள் ஊடாக எல்லைப்படுத்தப்படவுள்ளதாக அவர் கூறினார்.

வாவிக்கரையை பாதுகாப்பதற்காக 25 மீற்றர் இடைவெளியில் கொங்கிறீட்; தூண்கள் இடப்படவுள்ளதாகவும் இந்தத் திட்டத்துக்கு இபாட் மற்றும் உலக சுற்றாடல் பவுண்டேஷன் என்பவற்றினால் 33 மில்லியன் ரூபாய் ஒதுக்கிடப்பட்டுள்ளது.

ஆற்றினுள் கண்டல் தாவரங்களை வளர்ப்பதனால் மண் அரிப்பு மற்றும் எல்லைகளை பாதுகாப்பதுடன்,  கோடை காலங்களில் மீன்கள் தங்குவதற்கும் மீன் உற்பத்திக்கும் ஏதுவாக இந்த மரங்களின் நிழல்கள் உதவி புரிகின்றன எனத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X