Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Gavitha / 2015 ஓகஸ்ட் 13 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
அம்பாறை மாவட்டத்தின் வீரமுனையில் 1990.08.12 அன்று படுகொலை செய்யப்பட்டவர்களின் 25ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, ஆலயத்துக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு, நேற்று புதன்கிழமை (12) விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனை முன்னிட்டு இன்று வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் விசேட பூஜை நிகழ்வுகள் நடைபெற்றன. இதில் பெருமளவான உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
1990ஆம் ஆண்டு ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் போது, வீரமுனை கிராமத்தினை சூழவுள்ள வளத்தாப்பிட்டி, மல்வத்தை, மல்லிகைதீவு, வீரச்சோலை, அம்பாறை ஆகிய பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்கள் வீரமுனை இராம கிருஸ்ண மிசன் வித்தியாலயம், வீரமுனை சிந்தாயாத்திரைபிள்ளையார் ஆலயம் மற்றும் கண்ணகியம்மன் ஆலயம் என்பனவற்றில் தஞ்சமடைந்திருந்தனர்.
1990.08.12 அன்று, இந்த அகதி முகாம்களுக்குள் புகுந்த இராணுவத்தினரும் முஸ்லிம் ஊர்காவல் படையினரும் நடத்திய தாக்குதல்கள் காரணமாக 95க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 20க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருந்தனர்.
இதனை முன்னிட்டு வீரமுனை மக்கள் ஆண்டுதோறும் அனுஸ்டித்து வருகின்றனர். 90ஆம் காலப்பகுதியில் வீரமுனையில் தஞ்சமடைந்திருந்த சுமார் 200க்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டும் படுகொலை செய்யப்பட்டுமிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் ஆலய பரிபாலன சபையினர், உயிர் நீத்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .