Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 24 , மு.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (23) இரவு இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவன் மரணமடைந்ததுடன், இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொம்மாதுறை பகுதியைச் சேர்ந்த எஸ்.சுரேஷ்காந்தன் (வயது 14) மரணமடைந்த அதேவேளை, இவரின் சகோதரனான எஸ்.சுபராஜ் (வயது 19) மற்றும் இவர்களின் நண்பன் கோவிந்தன் பிரவீன் (வயது 16) படுகாயமடைந்துள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த இருவரும் கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த மூவரும் கொம்மாதுறையிலிருந்து மோட்டார் சைக்கிளொன்றில் செங்கலடி பதுளை வீதியால்; கரடியனாறு பகுதியில் கோவில் திருவிழாவுக்கு சென்றுகொண்டிருந்தனர். இதன்போது, இவர்களின் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த பாலமொன்றுடன் மோதியதாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
13 minute ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
5 hours ago
9 hours ago