2025 மே 03, சனிக்கிழமை

29 கிரம சேவகர் பிரிவுகளுக்கு 10 இலட்சம் வீதம் நிதி ஒதுக்கீடு

Kogilavani   / 2014 பெப்ரவரி 21 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


கல்முனை தமிழ் பிரிவுக்குட்பட்ட 29 கிரம சேவகர் பிரிவுகளுக்கும் தலா பத்து இலட்சம் வீதம் மக்கள் நலன்சார் செயற்றிட்டங்களுக்கு வழங்குதல் எனவும் இந்நிதியினை கொண்டு அந்தந்த கிராம மக்கள் அவர்களது கிராமங்களில் முன்மொழியப்படும் பொதுவான அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியும் கல்முனை அபிவிருத்திக் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தின் அபிவிருத்திக் குழுக் கூட்டம் அபிவிருத்திக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பி.எச். பியசேன தலைமையில் வியாழக்கிழமை (20)  பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்தை பிரதேச செயலாளர் கே. லவநாதன் ஆரம்பித்து வைத்தார்.

இதேவேளை கல்முனை தமிழ் பிரிவுக்குட்பட்ட கல்வி அபிவிருத்தி, சுகாதார மேம்பாடு, போக்குவரத்து சீராக்கல், மணல் வீதிகளை கிறவல் இட்டு புனரமைப்பு செய்தல், மின்சார வசத்தியில்லாமல் உள்ள கிராமங்களுக்கு மின்சாரம் வழங்குதல் போன்ற விடையங்கள் பற்றியும் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டன.

இக்கூட்டத்தில் மாகாணசபை உறுப்பினர்களான ரி.கலையரசன், எம்.ராஜேஸ்வரன், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜனாப். ஹப்பார் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் பி.இராஜகுலேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X