2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வெள்ளம் காரணமாக 30 இறால் பண்ணையாளர்கள் பாதிப்பு

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 06 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள  இறால் பண்ணைகளில் வளர்க்கப்பட்டு அறுவடைக்கு தயாராகவிருந்த சுமார் 22,000 கிலோ இறால்கள் மழை வெள்ளத்தால் அடிபட்டு வாவியினுள் சென்றுள்ளதாகவும்  இதனால், 30 இறால் பண்ணையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய நீர்வாழ் உயிரினங்கள் வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட நீரியல் உயிரினவியலாளர் எஸ்.ரவிக்குமார் தெரிவித்தார்.

அண்மையில் இந்த மாவட்டத்தில் பெய்த அடை மழையால்   வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில், ஈச்சந்தீவில் 25 ஏக்கரிலும்;; முதலைக்குடாவில்  15 ஏக்கரிலும்   வட்டவானில் 20 ஏக்கரிலும் மகிழடித்தீவில் 25 ஏக்கரிலும் செய்கை பண்ணப்பட்ட இறால் பண்ணைகளுக்கு மேலாக வெள்ளம் மேவிச் சென்றதாகவும் அவர் கூறினார்.

வெள்ளத்தால் அடிபட்டு மட்டக்களப்பு வாவியினுள் சென்ற   இறால்களை  வாவி மீன்பிடியாளர்கள் பிடித்துவருகின்றனர்.  இவ்வாறு பிடிக்கப்படும் இறால்கள் சந்தையில் ஒரு கிலோ 1,000  ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் நுகர்வோர் தெரிவித்தனர்.

அத்துடன், மழை வெள்ளம் காரணமாக  பண்ணையாளர்களின் நீரிறைக்கும் இயந்திரங்கள், காற்றூட்டிகள், நீர்க்குழாய்கள், தீனிகள், அறுவடை வலைகள், குடியிருப்புக்கள் என்பனவும் பாதிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 70 இறால் பண்ணையாளர்கள் உள்ளனர்.  

30 இறால் பண்ணையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி;.எஸ்.எம்.சாள்ஸுக்கு அறிவித்தாகவும்; இது தொடர்பில் உரிய  பிரதேச செயலாளர்களூடாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். இதற்கிணங்க  செயல்முறை இடம்பெறுவதாகவும் எஸ்.ரவிக்குமார் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X