2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வாகரையில் 350 கிணறுகளில் வெள்ளநீர்

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 05 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள  சுமார் 350 வீட்டுக் கிணறுகளில்  வெள்ளநீர் சென்றுள்ளதாகவும்  இந்தக் கிணறுகளை  இறைத்து சுத்தப்படுத்தவேண்டியுள்ளதாகவும்  வாகரை பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.ராகுலநாயகி  திங்கட்கிழமை (05) தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க, அண்மையில் பெய்த மழை  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகரை மக்களுக்கு தினமும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை விநியோகித்துவருவதாக முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்கா கள நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஏ.எஸ்.எம்.அஸ்மி தெரிவித்தார்.

வீடுகளிலுள்ள கிணறுகளில்  வெள்ளநீர் சென்றதால் மக்கள் குடிநீருக்காக சிரமப்பட்டனர். இந்த நிலையில்,  தமது நிறுவனம் வாகரை பிரதேச சபையுடன் இணைந்து குடிநீரை விநியோகித்துவருவதாகவும் அவர் கூறினார். பாதிக்கப்படாத கிணறுகளிலிருந்து நீரைப் பெற்று அதனை சுத்திகரித்து பவுஸர் மூலம் சுத்தான குடிநீரை  விநியோகித்து வருவதாகவும் அவர் கூறினார்.

கடந்த டிசெம்பர்  மாதம் 30ஆம் திகதியிலிருந்து திங்கட்கிழமைவரை (05) சுமார் 42 ஆயிரம் லீற்றர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X