Freelancer / 2022 மே 19 , மு.ப. 08:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
பொத்துவில் சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நுளம்பு பரவக் கூடிய வகையில் இடங்களை அசுத்தமாக வைத்திருந்த 37 பேருக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக, பொத்துவில் சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் ஏ.யூ. அப்துல் சமட் இன்று தெரிவித்தார்.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தினையொட்டி பொத்துவில் பிரதேசத்தில் நேற்று பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார் மற்றும் விசேட டெங்கொழிப்பு செயலணியினர் இணைந்து வீடு வீடாகச் சென்று டெங்கொழிப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
பொத்துவில் சுகாதார வைத்தியதிகாரி பிரிவுக்குட்பட்ட 07 கிராம சேவகர் பிரிவுகளில் 367 வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட டெங்கொழிப்பு பரிசோதனையின் போதே டெங்கு நுளம்பு பரவக் கூடிய இடங்களை வைத்திருந்த 37 பேருக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டவர்கள் ஒரு வார காலத்திற்குள் குறித்த இடங்களை சுத்தம் செய்ய வேண்டுமெனவும், மீறுபவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார். (R)
7 hours ago
7 hours ago
8 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
8 hours ago
20 Dec 2025