Janu / 2026 ஜனவரி 22 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெட்டி வடிவ 100 கூட்டல் 100 கழித்தல் கணக்குகளுக்கு 2 நிமிடம் 10 நொடிகளில் பதிலளிக்கும் மட்/தாழங்குடா ரோமன் கத்தோலிக்க பாடசாலையின் 3ஆம் வகுப்பு மாணவன் றிசோன் ரோபட் கௌரவிக்கப்பட்டார்.
அதற்காக சாதனை மாணவன் றிசோன் ரோபட்டுக்கு சோழன் உலக சாதனை விருது வழங்கப்பட்டது.
இவர் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் இலங்கை கிளையின் துணைச் செயலாளர் கதிரவன் த. இன்பராசா மற்றும் செயற் குழு உறுப்பினர் கவிஞர் அ. தனுராஜ் ஆகியோர் முன்னிலையில் இச் சாதனையை படைத்துள்ளார்.
குறித்த மாணவன் மட்டக்களப்பு தாளங்குடாவைச் சேர்ந்த ரோபட் ஞானமலர் ஆகியோரின் புத்திரர் என தெரியவருகிறது.
இவரை பாராட்டி கௌரவித்து விருதுகளும், சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில் அருட்தந்தை நவாஜி நவரெட்ணம்,அருட்ந்தை மார்சல் மற்றும் அருட்தந்தை கள் அன்பு,சுகந்தன்,அருட்சகோதரி தவசீலா மற்றும் பல அதிதிகளும் கலந்து சிறப்பித்துள்ளனர்.
வி.ரி.சகாதேவராஜா



2 minute ago
12 minute ago
16 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
12 minute ago
16 minute ago
20 minute ago