2025 மே 15, வியாழக்கிழமை

60 இலட்சம் ரூபா செலவில் 100 மலசலக்கூடங்கள்

Kogilavani   / 2014 ஏப்ரல் 29 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு, வவுணதீவில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட நூறு குடும்பங்களுக்கு 100 மலசலகூட வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கான 60 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

அத்துடன் மீள்குடியேற்ற பகுதிகளில் 200 குடும்பங்களுக்கு  குடிநீரைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தல் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பிரதேச மக்களின் குடிநீர் மற்றும் சுகாதாரம் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் வவுணதீவு பிரதேச செயலகத்தில் திங்கட்கிழமை(28) மாலை நடைபெற்றது.

மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், வவுணதீவு பிரதேச செயலாளர் சுதாகர், மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர் பொன்.ரவீந்திரன் உட்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போதே பிரதியமைச்சர் மேற்கண்டாவறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பிரதேச மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்வதற்கான விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன' எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதி மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .