2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

600 குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்புக்கள்

Suganthini Ratnam   / 2014 மே 07 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள  600 தமிழ் மற்றும் முஸ்லிம் குடும்பங்களுக்கு இலவசமாக  குடிநீர் இணைப்புக்களை பெறுவதற்கான  நிதியுதவி செவ்வாய்க்கிழமை (06) வழங்கப்பட்டன.

ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேசனின் ஏற்பாட்டிலும் பொருளாதார அபிவிருத்திப்  பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியிலும் இவர்களுக்கு இதற்கான  நிதியுதவி வழங்கப்பட்டன. 

இதன்போது சுனாமி அனர்த்தத்தால்  பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களில்  தலா குடும்பத்திற்கு 3,240 ரூபா படியும் சமுர்த்தி நன்மை பெறும் 400 குடும்பங்களில் தலா குடும்பத்திற்கு 5,480 ரூபா படியும் வழங்கப்பட்டன.

காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதியைமச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்,  கிழக்கு மாகாணசபை உறுப்பினர்; சிப்லி பாறூக், சவூதி அரேபிய மன்னரின் சட்ட ஆலோசகர் அஸ்ஸெய்ஹ் யஹ்யா பின் அப்துல் அஸீஸ், காத்தான்குடி நகரசபைத் தலைவர் எஸ்.எச்.அஸ்பர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த வருடம் மட்டக்களப்பு மாவட்டத்தில்  2,000 குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்பை பெறுவதற்கு நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X