2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பில் 7 பேர் டெங்கினால் பாதிப்பு

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 05 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் பெய்த  மழையைத்  தொடர்ந்து மட்டக்களப்பு மாநகரசபை பிரதேசத்தில் டெங்கு பரவிவருவதுடன், 7 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  மட்டக்களப்பு மாநகரசபையின் பொது சுகாதார பரிசோதகர் கே.தேவநேசன் தெரிவித்தார்.

இந்த நிலையில், மட்டக்களப்பு மாநகரசபை பிரதேசத்தில் ஞாயிறு (4), திங்கள் (5) ஆகிய இரு தினங்களிலும்  மாநகர ஆணையாளர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் பாரிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன்,  டெங்கு நுளம்பு பரவும் வகையில் வசிப்பிடங்களை வைத்திருந்த  7 பேர் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டதாகவும்  அவர் கூறினார்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X