2025 மே 02, வெள்ளிக்கிழமை

84 குடும்பங்களுக்கு காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2014 பெப்ரவரி 14 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


மகாவலி அதிகார சபையினால் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களான ரெதிதென்ன மற்றும் ஜெயந்தியாய ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 84 குடும்பங்களுக்கு தலா 40 பேர்ச் காணிகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் வியாழக்கிழமை (13) ஜெயந்தியாய அஹமட் ஹிராஸ் வித்தியாலய மைதானத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.

ஜெயந்தியாய விவசாய சங்கத் தலைவர் ஏ.அஹமட் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்துகொண்டதுடன் அதிதிகளாக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத், உதவி திட்டப் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், மகாவலி அதிகார சபையின் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது அதிதிகள் பிரதேச மக்களால் பொன்னாடை போர்த்தியும் நினைவுச் சின்னமும் வழங்கியும்  கௌரவிக்கப்பட்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X