2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

863,000 ரூபாய் பெறுமதியான செவிபுல, கற்புல உபகரணங்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2014 பெப்ரவரி 14 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்


யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வவுணதீவுப் பிரதேசத்தில் கண்பார்வை குறைந்த மற்றும் செவிப்புலனற்ற மாணவர்கள் 9 பேருக்கு சுமார் 863,000 ரூபாய் பெறுமதியான செவிபுல, கற்புல உபகரணங்கள் புதன்கிழமை (12) சிறுவர் பாதுகாப்பு நிறுவனத்தின் அனுசரணையுடன் வை.எம்.சீ.ஏ நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ளன.

மண்முனை மேற்குப் பிரதேச செயலாளர் வெ.தவராஜா தலைமையில் இடம்பெற்ற இந நிகழ்வில் 5 மாணவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகளும் 4 மாணவர்களுக்கு செவிப்புல சாதனங்களும் வழங்கப்பட்டுள்ளன. 

இதில், செவிப்புலனற்ற 04 மாணவர்களுக்கு 816,000 ரூபா பெறுமதியான 8 செவிப்புல சாதனங்களும்  கண் பார்வை குறைந்த 05 மாணவர்களுக்கு 47,000ரூபா பெறுமதியான 5 மூக்குக் கண்ணாடிகளும் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் சிறுவர் நன்னடத்தை உத்தியோகஸ்தர் எம்.வரதராஜன், சிறுவர் மேம்பாட்டு உத்தியோகஸ்தர் ரி.பிரபாகரன், சிறுவர் பாதுகாப்பு நிறுவன பிராந்திய முகாமையாளர் மாக் பற்ரசன், வை.எம்.சீ.ஏ.நிறுவனத்தின் வெளிக்கள உத்தியோகஸ்தர்களான திருமதி நா.கிரிசாந்தினி, திருமதி எஸ்.அனிற்ரா ஆகியோர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X