2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

அதிகாரிகள் திடீர் இடமாற்றம்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 நவம்பர் 20 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏறாவூர் மற்றும் கிண்ணியா போன்ற நகர சபைகளின் செயலாளர்களாக கடந்த வியாழக்கிழமை கடமையேற்ற அதிகாரிகளுக்கு, மறுதினமே இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கமைவாக, ஏறாவூர் நகர சபையின் செயலாளராகக் கடமையேற்ற என்.எம்.நெபீஸ் மறுதினமே கிண்ணியா நகர சபையின் செயலாளராக இடமாற்றப்பட்டுள்ளார்.  

கிண்ணியா நகர சபையின் செயலாளராக கடமையேற்ற எம்.ஸியாஉல் ஹக், மட்டக்களப்பு மாநகர சபையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோன்று, கிழக்கு சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளராக இருந்த எம்.ஐ.பிர்னாஸ், ஏறாவூர் நகர சபையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

காத்தான்குடி நகரசபை செயலாளராக இருந்து காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் நிருவாக உத்தியோகத்தராக இடமாற்றப்பட்ட எஸ்.எம்.ஸபி, தற்போது பொத்துவில் பிரதேச சபையின் செயலாளராக இடமாற்றப்பட்டுள்ளார்.

உடனடியாக அமுலுக்குவரும் வகையில் இந்த இடமாற்றங்கள் இடம்பெற்றதுள்ளதுடன், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் பணிப்புரைக்கமைய செய்யப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X