எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2017 டிசெம்பர் 19 , பி.ப. 02:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, காத்தான்குடியில் அரசியல் கட்சியொன்று பாடசாலை மாணவர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த ஒரு தொகை அப்பியாசக் கொப்பிகள், நேற்று (18) கைப்பற்றப்பட்டுள்ளனவென, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த அப்பியாசக் கொப்பிகள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தேர்தல் சட்ட விதிகளை மீறும் வகையில், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி எனும் அரசியல் கட்சியே, இந்த அப்பியாசக் கொப்பிகளை வழங்குவதற்காக வைத்திருந்த போது, அக்கட்சியின் கூட்ட மண்படத்தில் வைத்து, இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது, 5,175 கொப்பிகள் கைப்பற்றப்பட்டதாகவும் இது தொடர்பான அறிக்கை, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட அப்பியாசக் கொப்பிகள், காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
2 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago