Niroshini / 2015 செப்டெம்பர் 23 , மு.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்
பொருட்களின் பெறுகை, சேவைகள் மற்றும் வேலைகள் சம்பந்தமான நடைமுறைகள் பற்றி அரச ஊழியர்களுக்கான பயிற்சிகள் இன்று புதன்கிழமை (23) மட்டக்களப்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண முகாமைத்துவ பயிற்சிப் பிரிவினால் நடத்தப்பட்ட இப்பயிற்சி கடந்த திங்கட்கிழமை (21) ஆரம்பிக்கப்பட்டு கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருவதாக இணைப்பு அதிகாரி என்.சிவசெல்வம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையின் கீழ் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ உதவியாளர்கள் என 66 பேர் பங்கேற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மாகாண திறைசேரியின் பிரதம கணக்காளர் என்.ரமேஸ், நீர்ப்பாசன பிரதிப் பணிப்பாளர், திருகோணமலை வி.இராஜகோபாலசிங்கம்,மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பிரதம கணக்காளர் கெ.லிங்கேஸ்வரன் ஆகியோர் பயிற்சிகளை வழங்கினர்.
1 hours ago
1 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
5 hours ago